வேளச்சேரி: பல்வேறு வீடுகளில் திருடிய இளைஞர் கைது

296பார்த்தது
வேளச்சேரி: பல்வேறு வீடுகளில் திருடிய இளைஞர் கைது
வேளச்சேரி, மேடவாக்கம் பகுதிகளில் மென்பொறியாளர்கள் தங்கியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து விலை உயர்ந்த மடிக்கணினி, கைப்பேசிகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தன. மேடவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்டதாக கடலூரைச் சேர்ந்த ஜனாார்த்தனனை (27) வெள்ளிக்கிழமை கைது செய்தனர். விசாரணையில் கேளம்பாக்கம், தாம்பரம், சோழிங்கநல்லூர் பகுதிகளிலும் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

தொடர்புடைய செய்தி