செங்கல்பட்டு டவுன் - Chengalpattu Town

படாளம் சர்க்கரை ஆலையில் கொதிக்கலன் இளஞ்சுடேற்றும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவை வரும் 22 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதற்காக, ஆலையில் உள்ள கொதிகலன்களை சூடேற்றி தயார் நிலையில் வைக்கும் நிகழ்ச்சி, செயலாற்றியர் குமரேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் படாளம் சத்தியசாய் கலந்துகொண்டு பூஜைகளை செய்து வைத்து கொதிகலன்களை இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆலை அதிகாரிகள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా