பொக்லைனில் மோதிய மாநகர பஸ் 15 பயணியர் காயத்துடன் தப்பினர்

0பார்த்தது
பொக்லைனில் மோதிய மாநகர பஸ் 15 பயணியர் காயத்துடன் தப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மாம்பாக்கம், சோனலுார் கிராமத்திலிருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற '55சி' மாநகர பேருந்து, வண்டலுார் அடுத்த கொளப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே முன்னால் சென்ற பொக்லைன் இயந்திரம் மீது மோதி சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்தது. இதில், மூன்று பெண்கள் உட்பட 15 பயணிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்டனர். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி