செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் இடையே 68 கிலோமீட்டர் தூரத்திற்கு ₹993 கோடி மதிப்பில் இரண்டாவது ரயில் தடம் அமைக்கும் திட்டத்திற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய தடம் மூலம், இப்பகுதியில் புறநகர் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பயணிகளின் வசதியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.