தாம்பரத்தில் காவலாளி விரலை கடித்ததால் பரபரப்பு

84பார்த்தது
தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ஊசி போடுவதற்கான அறையை தவறாக காட்டியதாக கூறி, காவலாளி அம்பிகாபதியின் விரலை கடித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பம்மலை சேர்ந்த அம்பிகாபதி (56) தனியார் நிறுவன காவலாளியாக பணிபுரிகிறார். நேற்று, சின்னா (59) என்பவர் தனது மகளுக்கு ஊசி போட அறை கேட்டுள்ளார். அம்பிகாபதி தவறான அறையை காட்டியதாக ஆத்திரமடைந்த சின்னா, அவரிடம் கைகலப்பில் ஈடுபட்டு விரலை கடித்தார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் சின்னாவை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி