கடம்பூர் சாலையில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்

0பார்த்தது
கடம்பூர் சாலையில் உலா வரும் கால்நடைகளால் விபத்து அபாயம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் - கலிவந்தபட்டு சாலையில், கடம்பூர் பகுதியில் காலை மற்றும் இரவு நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் சாலையை மறித்து படுத்து கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சில மாடுகள் வாகன ஓட்டிகளை துரத்தி செல்வதாகவும் கூறப்படுகிறது. இதனால், மாடுகளை பிடிக்கவும், சாலையில் மாடுகளை விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் மறைமலை நகர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி