செங்கல்பட்டு, அண்ணா நகரைச் சேர்ந்த பா.ஜ. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலர் சசிகுமார், செங்கல்பட்டு நகர பா.ஜ. தலைவர் மகேஸ்வரனுடன் காரில் சிங்கபெருமாள் கோவில் சென்றபோது, பரனுார் சுங்கச்சாவடியில் முக்கிய நபர்களுக்காக ஒதுக்கப்பட்ட வழியில் சென்றதால் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் சசிகுமாரை தாக்கியதாகவும், சசிகுமாரும் ஊழியர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பா.ஜ. நிர்வாகிகள் சுங்கச்சாவடி அருகே குவிந்து, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.