இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இரத்த தான முகாம்

4பார்த்தது
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இரத்த தான முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அரசு ஆரம்பப் பள்ளியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில், செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குருதி கொடுக்கும் வகையில் இரத்த தான முகாம் இன்று (மே. 31) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட குருதி கொடையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமில் செங்கல்பட்டு மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் சங்கர், சத்தீஷ், ஜீவானந்தம், சுந்தர், சுரேஷ், அரசு மருத்துவர்கள் அனிதா, விஜய் துர்கா சினி மற்றும் மல்லை சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி