மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து

1பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கருங்குழி என்ற இடத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கணவன்-மனைவி மீது ஸ்கார்பியோ கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மெஹருதீன் நிஷா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் அப்துல் முனாப் படுகாயமடைந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி