கூடுவாஞ்சேரியில் வாடகை வீடு எடுத்து எம்.பி.ஏ. படிக்கும் மகேஸ்வரன், நேற்று முன்தினம் பல்கலை வளாகத்தில் இருந்தபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்று மறைமலை நகர் வனப்பகுதியில் தாக்கியுள்ளது. தலையில் காயமடைந்த மாணவருக்கு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்துவிட்டு, மர்ம நபர்கள் அவரை மீண்டும் பல்கலை வளாகத்திலேயே விட்டுச் சென்றுள்ளனர்.