செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டர் வீரப்பன் பதவியேற்பு

2பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டத்தின் புதிய ஆட்சியராக M. வீரப்பன் ஐ. ஏ. எஸ். பொறுப்பேற்றார். இதற்கு முன் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக பணியாற்றிய இவர், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு மாவட்டத்தின் 6வது கலெக்டராக பொறுப்பேற்றார். அவரை மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஶ்ரீதேவி உள்ளிட்ட அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியராக இருந்த மாலதி ஹெலன் சென்னை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.