இன்று காலை புதுப்பட்டினம் கடை வீதிக்குச் சென்று திரும்பிய உய்யாலிகுப்பம் இளைஞர் கோகுலை, புதுப்பட்டினம் இளைஞர் ஆகாஷ் தாக்கியதால் ஆத்திரமடைந்த உய்யாலிகுப்ப மீனவர்கள், புதுப்பட்டினம் மீனவர்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், புதுப்பட்டினம் மீனவர்கள் உய்யாலிகுப்பம் பகுதியில் உள்ள வீடுகளை அடித்து நொறுக்கினர். இந்த தாக்குதலில் நான்கு வீடுகளில் உள்ள பொருட்கள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. இதன் மொத்த சேதம் சுமார் 25 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.