செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில், கஞ்சா கைப்பற்றப்பட்டதை அடுத்து சிறுவர்கள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கஞ்சாவை திரும்பக் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சிறுவன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மறுத்ததால், மற்ற இரு சிறுவர்கள் அவனைத் தாக்கியுள்ளனர். இதில் அவனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.