செங்கல்பட்டு அருகே, காட்டுப்பன்றி குறுக்கே ஓடியதில் நிலைதடுமாறி விழுந்ததில் 73 வயது முதியவர் ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்று முன்தினம் மாலை, சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள அகோர வீரபத்திரர் கோவிலுக்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.