செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த செண்பக வல்லி (75) என்பவர், நேற்று காலை ஆத்தூர் துவக்கப் பள்ளி அருகே செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, செங்கல்பட்டு நோக்கி வந்த அடையாளம் தெரியாத கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த செண்பக வல்லி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விபத்து குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.