திருவள்ளூர் மாவட்டம் அகரம் பகுதியைச் சேர்ந்த பழனி (52) என்பவர், நேற்று முன்தினம் (மே. 20) தனது மகளைப் பார்க்க செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, சிங்கப்பெருமாள்கோவில் சாலையில் கொளத்தூர் அருகே இறைச்சி கோழி ஏற்றிச் சென்ற லாரியின் பின்புறம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலூர் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.