செங்கல்பட்டு மாவட்டம் பழைய பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் மார்கஸ், தனது குடும்பத்துடன் கடந்த 24ம் தேதி புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றிருந்தார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் அவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, 8 சவரன் தங்க நகை, இரண்டு வைர நெக்லஸ் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மார்கஸ் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் தற்போது இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.