புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு, நேற்று விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில், போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, முன்பதிவு இல்லாத பெட்டியில், ஒரு வாலிபரின் பையை சோதனை நடத்தியதில், மதுபான பட்டில்கள் இருந்தன.
அவரை, காவல் நிலையம் அழைத்து வந்து, போலீசார் விசாரணை நடத்தியதில், துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுடலை, 23, என்பது தெரிந்தது. அவரிடமிருந்து 38 புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு, 8, 000 ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர். அதன்பின், செங்கல்பட்டு மதுவிலக்கு போலீசாரிடம், அவரை போலீசார் ஒப்படைத்தனர்.