சென்னையைச் சேர்ந்த பிரதீப், பெயின்டர், தனது மனைவி பிரீத்தி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வந்தார். அவரது மனைவி வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 12 ஆம் தேதி, பிரதீப் தனது இரு மகள்களுடன் மாமல்லபுரம் வந்து ஒரு தனியார் விடுதியில் தங்கினார். அங்கு, தனது மகள்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். இதில் இரு மகள்களும் உயிரிழந்தனர். இதனையடுத்து தந்தை மீது கொலை வழக்கு பாய்ந்துள்ளது.