சிங்கபெருமாள் கோவில் அடுத்த பாரேரி சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயது பெயின்டர் வெங்கடேசன், நேற்று முன்தினம் இரவு சாலையைக் கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.