சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜெய்சங்கர், தனது சொந்த ஊருக்குச் செல்ல கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த மாநகர பேருந்து ஒன்று அவர் மீது மோதியதில், முன்பக்க டயரில் சிக்கி ஜெய்சங்கருக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் மாநகர பேருந்து ஓட்டுநர் கிஷோர் என்பவரை கைது செய்துள்ளனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.