கோடை விடுமுறை, பண்டிகை, கோயில் திருவிழாக்கள் மற்றும் வார விடுமுறை காரணமாக மே 27 அன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் கூட்டம் அலைமோதியது. போதிய அரசு பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்பட்டனர். தமிழ்நாடு
போக்குவரத்து துறை அமைச்சர்
விஜய் தமிழன் பார்த்திபன் அங்கு வந்தபோது, பேருந்து வசதி செய்து தருமாறு பயணிகள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.