செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே நேத்தப்பாக்கம் கிராமத்தில், குபேந்திரன் (26) என்பவருக்கும் காஞ்சனா என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், குபேந்திரன் காஞ்சனாவின் மருமகன் சுமன் (24) மற்றும் சந்தோஷ் (48) ஆகியோரை தாக்கியுள்ளார். இது தொடர்பாக குபேந்திரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில் வெளியே வந்த குபேந்திரனை, நேற்று (மே. 25) கருங்குழி சாலையில் காஞ்சனாவின் உறவினர்களான சுமன், சந்தோஷ், கென் ஆகியோர் ஓட ஓட விரட்டி வெட்டினர்.