டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால், செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் ரஜாகுளிப்பேட்டை அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.