வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் செய்யூர் எம்எல்ஏ

268பார்த்தது
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன பெரும்பாக்கம் ராஜசேகர், பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். இன்று இலத்தூர் ஒன்றிய கிராமங்களுக்குச் சென்று இனிப்புகள் வழங்கி அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் மாமல்லபுரம் ராகவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி