தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அபராதம்

295பார்த்தது
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அபராதம்
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் ஒரு மளிகை கடையில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சோதனையில் புகையிலை பொருட்கள் விற்பனை நடந்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடை உரிமையாளர் கணேசனுக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி