சென்னை முதலை பண்ணை மற்றும் பாம்பு பண்ணையில் தென் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட 12 அடி நீளமுள்ள 3 பச்சை நிற அனகோண்டா பாம்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நேற்று (மே. 17) சுற்றுலாப் பயணிகள் இந்த அரிய வகை பாம்புகளை கண்டு ரசித்தனர். ஒரு ஆண் பாம்புக்கும் இரண்டு பெண் பாம்புகளுக்கும் தமிழ்ச்செல்வன், லோகி, மெடுசா என பெயரிடப்பட்டுள்ளது.