சித்தாமூர் அடுத்த இந்தலுார் ஊராட்சியில், 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 35 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் சனிக்கிழமை திறந்து வைத்தார். மேலும், சித்தாமூர் ஒன்றியத்தில் 1.84 கோடி ரூபாயில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகம், பள்ளி வகுப்பறை, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட 10 புதிய கட்டடங்களையும் அமைச்சர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.