தாம்பரம் மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் (மே. 25) திருநீர்மலை பிரதான சாலையில் ஆந்திர பதிவெண் கொண்ட சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் மூட்டை மூட்டையாக 170 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த பள்ளாவராகலா பாபு (35), கலா சத்யா நாராயணா (29), சேனாதிபதி துர்கா பிரசாத் (24), வன்கலா துர்கா பிரசாத் (23) ஆகியோர் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.