பெருங்களத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்ட சொகுசு கார் மீது மற்றொரு கார் மோதியது. இதைத் தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி காரில் மோதி நிலைதடுமாறி, பின்னால் வந்த மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதியதில் அப்பளம் போல் நொருங்கிய இருசக்கர வாகனத்தில் சிக்கிக்கொண்டனர். பொதுமக்கள் போராடி மீட்ட தம்பதிக்கு எலும்பு முறிவு, பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தாம்பரத்திலிருந்து வண்டலூர் வரை 5 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.