செங்கல்பட்டு மாவட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை நேற்று துவக்கி வைத்தார். செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, தன்னார்வலர்களுக்கு சிம் கார்டு மற்றும் கனவு அட்டை வழங்கினார். இந்த திட்டம் திருவள்ளூர் மாவட்டத்திலும் நேற்று துவக்கப்பட்டது.