செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் சதுரங்கப்பட்டினம் பகுதியில் இன்று (மார்ச் 3) 27வது ஆண்டு மாசி மாத தீர்த்தவாரி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், மீனவ கிராம தெய்வங்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, சுற்றியுள்ள கிராம தெய்வங்களுடன் கடற்கரையில் சங்கமித்து தீர்த்தவாரி உற்சவம் நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.