செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள ஒத்திவாக்கம் கிராமத்தில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் இடமிருந்து 11,000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. போதிய வாகன வசதி இல்லாததால் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்போரூர் எம்எல்ஏ விஜயராஜ் இன்று கொள்முதல் நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழை சூழ்நிலையை கருத்தில் கொண்டு நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்ப்பாய் வழங்கினார்.