செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியில், கடன் வாங்கித் தருவதாகக் கூறி முன்பணமாக 30,000 ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகக் கூறப்படும் சண்முக பாண்டியனை, மதியழகன் மற்றும் அவரது ஆறு நண்பர்கள் சேர்ந்து சரமாரியாகத் தாக்கி கொலை செய்தனர். காயமடைந்த சண்முக பாண்டியன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றவாளிகளான மதியழகன் மற்றும் அவரது நண்பர்கள் சூர்ய பிரகாஷ், சஞ்சய் ஆகியோர் செங்கல்பட்டு டி.எஸ்.பி. அலுவலகத்தில் சரணடைந்தனர்.