செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த இரட்டையர்களான சஞ்சனா மற்றும் சாதனா, இருவரும் ஒரே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று (மே 20) வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், இருவரும் தலா 429/500 மதிப்பெண்கள் பெற்று பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த இரட்டையர்களின் சாதனை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.