பரனூரில் பாண்டி மது கடத்தல் – இருவர் கைது.

335பார்த்தது
மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் பி. நடராஜனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாண்டிச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி விற்பனை செய்து வந்த கொந்தமூர் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (48) என்பவரை போலீசார் கண்காணித்தனர். இன்று (08.11.2025) காலை 10.30 மணியளவில் பரனூர் டோல் பிளாசா அருகே டாடா இண்டிகோ காரில் இருந்து 540 மதுப்பாட்டில்கள் (சுமார் 178 லிட்டர்) பறிமுதல் செய்யப்பட்டன. பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் Ertiga காரில் மதுப்பாட்டில்களை பெற்றுச் சென்றது தெரியவந்தது. மோகனும் அவரது வாகனமும் கைப்பற்றப்பட்டு, இருவரும் செங்கல்பட்டு மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி