செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சோழிங்கநல்லுார் இ.சி.ஆர். சாலையில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனம் செல்வது கண்டறியப்பட்டது. விசாரணையில், சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பிரசாத் மற்றும் கோவை கார்த்திகேயன் ஆகியோர் வாகனத்தை திருடியது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.