காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்து 5 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், 92 பெண்கள் உட்பட மொத்தம் 183 பேர் கைது செய்யப்பட்டனர்.