செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள அரேபியா சீ புட்ஸ் உணவகத்தில் வேலை செய்து வந்த மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஷேக் மொர்டுஜோ (53), சிங்கபெருமாள் கோவில் பேருந்து நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி. சாலையில் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தோர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பரிசோதனை செய்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள், அவர் நெஞ்சு வலி ஏற்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சிங்கபெருமாள் கோவில் போலீசார், ஷேக் மொர்டுஜோவின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.