செய்யூர் அருகே மின்னல் தாக்கியதில் பெண் பலி, 3 பேர் காயம்

366பார்த்தது
செய்யூர் அருகே மின்னல் தாக்கியதில் பெண் பலி, 3 பேர் காயம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் ஒன்றியத்தில் நேற்று (மே. 15) கனமழை பெய்தபோது, சாலையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கன்னியம்மாள் (50) மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சிறுநல்லூரில் மின்னல் தாக்கியதில் பிரியா (30), அவரது மகள் கவிதா (13), மகன் ருத்ரேஷ் ஆகியோர் லேசான காயமடைந்து மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து செய்யூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி