வெட்டு காயங்களுடன் இளைஞர், புதர் பகுதியில் சடலமாக மீட்பு

1பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் சூனாம்பேடு அடுத்த தாமரைகேணி பகுதியைச் சேர்ந்த கொத்தனார் விஜய் (32), நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று (மே. 21) காலை அதே பகுதியில் உள்ள ஒரு புதரில் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த சூனாம்பேடு போலீசார் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி