வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் தற்போது 50 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவல்லிக்கேணி, மெரினா சாலையில் காலை முதல் பெய்து வரும் மழையால் மக்கள் குடை பிடித்தபடி வேலைக்குச் செல்கின்றனர். புயலின் நகர்வு மற்றும் மழையின் தீவிரம் குறித்து வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.