
காஞ்சிபுரம்: கனமழை எச்சரிக்கை; ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, நாளை (நவம்பர் 16), நாளை மறுநாள் (நவம்பர் 17) ஆகிய இரு தினங்களுக்கு கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கனமழையை எதிர்கொள்ள, கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.








































