காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர் ஜனவரி மாதம் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். இதில் விதிகளை மீறி இயக்கிய 111 வாகனங்கள் கண்டறியப்பட்டன. அதிகபாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதிச்சான்று புதுப்பிக்காத, ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத, தார்பாலின் மூடாத, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் வாகனங்கள் என பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இந்த வாகனங்களுக்கு வரி மற்றும் அபராதம் வசூலிக்கப்பட்டதுடன், சில வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டும் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரே மாதத்தில், இந்த 111 வாகனங்களிடம் இருந்து மொத்தமாக 10 லட்சத்து 31,865 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.