காஞ்சிபுரம் ஓரிக்கை, வேளிங்கபட்டரை வேகவதி ஆற்றங்கரையில் வரலாற்று ஆய்வாளர் முனைவர் அன்பழகன் மற்றும் காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமாசங்கர் ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வேகவதி ஆற்றின் பாலம் அருகில் உள்ள திருவள்ளுவர் தெருவில் கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சதிகல் சிற்பம் ஒன்றை கண்டறிந்தனர். இந்த கண்டுபிடிப்பு அப்பகுதியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.