செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே வெங்கூர் கிராமத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில், கடந்த 9ம் தேதி இரவு 9:00 மணியளவில், இரு சக்கர வாகனங்களில் வந்த ஐந்து பேர் பெட்ரோல் நிரப்பி, பணம் கேட்ட ஊழியர் அப்பாதுரையை கத்தியால் மிரட்டி, அவரிடம் இருந்த 10,000 ரூபாயை பறித்துச் சென்றனர். இது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயமணி (24) மற்றும் அசோக் நகரைச் சேர்ந்த வின்சி லவ்லி (25) ஆகிய இருவரை கைது செய்து, பைக், கத்தி மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.