காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லவேரு மேடு பகுதியில் மஞ்சள் நீர் கால்வாய் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் ஆனந்தன், பிரகாஷ், சக்திவேல் ஆகிய மூன்று பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை எடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த தகவலை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்.