விஷவாயு தாக்கியதில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் சிப்காட் வெண்காடு பகுதியில் உள்ள யுனைடெட் இண்டஸ்ட்ரீஸ் பிளாஸ்டிக் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலையில், நேற்று (மே 19) பெயிண்ட் மற்றும் ரசாயன கழிவுகள் சேமித்து வைக்கும் 40 அடி ஆழ தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, விக்னேஷ் (20) மற்றும் மதன்ராஜ் (22) ஆகியோர் மயங்கி விழுந்தனர். அவர்களை மீட்க முயன்ற மேற்பார்வையாளர் மணிகண்டன் மற்றும் மேலாளர் பரதன் ஆகியோரும் மயங்கி விழுந்தனர். இதனால், நான்கு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
