வேடலில் பயன்பாடின்றி வீணாகும் அம்மா பூங்கா

0பார்த்தது
வேடலில் பயன்பாடின்றி வீணாகும் அம்மா பூங்கா
காலுார் ஊராட்சி வேடல் கிராமத்தில் 2018ம் ஆண்டு அமைக்கப்பட்ட அம்மா விளையாட்டு பூங்கா, முறையான பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. இங்கு நடைபாதை, அமரும் இருக்கைகள், கழிப்பறை, உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைக்கப்பட்டு, சுற்றியுள்ள கிராம மக்களும் பயன்படுத்தி வந்தனர். தற்போது பூங்காவிற்குள் களைகள் வளர்ந்து, கரையான்கள் புற்றுகட்டி, இருக்கைகள் துருப்பிடித்து காணப்படுகின்றன. உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி