செங்கல்பட்டு: ஓடும் பஸ்சில் கர்ப்பிணியிடம் நகை திருட்டு; வாலிபர் கைது

433பார்த்தது
செங்கல்பட்டு: ஓடும் பஸ்சில் கர்ப்பிணியிடம் நகை திருட்டு; வாலிபர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 6 மாத கர்ப்பிணி பிரியா, கடந்த மாதம் 30-ந்தேதி வேலூர் சென்றபோது, படப்பை அருகே பஸ்சில் இருந்த மர்மநபரால் அவரது 18 பவுன் நகை திருடப்பட்டது. இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், திருச்சி சாலக்குடி பகுதியைச் சேர்ந்த காசிநாதன் (30) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட நகைகளை விற்று வைத்திருந்த ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி